ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு!

ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு!

Written By NIsha on Sunday, August 18, 2013 | 8:48 PM

ஹட்டன் - டயகாமம் 5ஆம் பிரிவு ஆக்ரோயா ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் காலை மீட்கப்பட்டுள்ளதாக டயகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

டயகாமம் ஈஸ்ட் 3ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான விஜயகுமார் உலகநாயகி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் சுகயீனமுற்றிருந்த தனது கணவரை டயகாமம் வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு அன்றைய தினம் மாலை அவருக்கு உணவு வழங்கி விட்டு வீடு திரும்பியவேளை குறித்த பெண் காணாமல் போயிருந்தார். இது குறித்து டயகாமம் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கென கொண்டு செல்லப்பட்டுள்ளது. டயகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com