சக்தி வாய்ந்த உளவு செயற்கைகோளை ரகசியமாக விண்ணில் செலுத்தியது அமெரிக்கா! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சக்தி வாய்ந்த உளவு செயற்கைகோளை ரகசியமாக விண்ணில் செலுத்தியது அமெரிக்கா!

சக்தி வாய்ந்த உளவு செயற்கைகோளை ரகசியமாக விண்ணில் செலுத்தியது அமெரிக்கா!

Written By NIsha on Thursday, August 29, 2013 | 2:48 AM

உலக நாடுகளின் நடமாட்டத்தை மோப்பம் பிடிக்கும் நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள வண்டன்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'டெல்டா-4' நவீன உளவு செயற்கைகோளை நேற்று விண்ணில் ஏவியது.

'என்ரோல் - 65' என்னும் இந்த செயற்கைகோள் ஏவப்படும் செய்தி மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பு வாய்ந்த சொத்தினை விண்ணில் செலுத்தியதை அமெரிக்காவின் கௌரவமாக கருதுவதாக இந்த உளவு செயற்கைகோளின் திட்ட அதிகாரி ஜிம் ஸ்பானிக் தெரிவித்தார்.

செயற்கைகோள் ஏவப்படும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது பேசிய வர்ணனையாளர், 'இந்த நாட்டின் விடுதலைக்காக தொண்டாற்றிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த செயற்கைகோள் ஏவலை அர்ப்பணிக்கிறோம்' என்றார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com