ஊழலில் பெண்களை விட முன்நிலை வகிக்கும் ஆண்கள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஊழலில் பெண்களை விட முன்நிலை வகிக்கும் ஆண்கள்!

ஊழலில் பெண்களை விட முன்நிலை வகிக்கும் ஆண்கள்!

Written By NIsha on Monday, September 16, 2013 | 6:48 AM

ஆண்களை விட பெண்கள் ஊழலில் ஈடுபடுவது குறைவு என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் ஊழல் மலிந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'ரைஸ்' பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு சர்வதேச நாடுகளில் 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. முதன் முறையாக கடந்த 1998 முதல் 2007–ம் ஆண்டு வரை 157 நாடுகளிலும், பின்னர், 2–வது கட்டமாக 68 நாடுகளிலும் ஆய்வு நடந்தது.

அதில் ஊழல் செய்வதில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இந்த நிலை ஜனநாயக அரசுகள் இயங்கும் நாடுகளில் உள்ளன.

அதுமட்டுமின்றி ஊழலில் ஈடுபடுபவர்கள் வாக்கு சீட்டுகள் மூலம் பொது மக்களாலும், சட்டரீதியாக நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த தகவலை ஆய்வு நடத்திய 'ரைஸ்' பல்கலைக்கழக பேராசிரியர் ஜஸ்டின் இசாரே தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அரசியலை பொறுத்தவரை ஆண்–பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு முன்பு நடத்திய ஆய்வில் பெண் அரசியல்வாதிகள் சிறிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com