ஆசாரம் பேண வேண்டிய ஆசாராம் பாபுவின் திடுக்கிடும் தகவல்கள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஆசாரம் பேண வேண்டிய ஆசாராம் பாபுவின் திடுக்கிடும் தகவல்கள்!

ஆசாரம் பேண வேண்டிய ஆசாராம் பாபுவின் திடுக்கிடும் தகவல்கள்!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 4:31 AM

ஆன்மீகத் தலைவர் ஆசாராம் பாபு இந்திய மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல விடுதியின் வார்டனுடன் உறவு கொண்டதாக அவரது உதவியாளர் சிவா தெரிவித்துள்ளார்.

ஆசாராம் பாபு பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உதவியாளர் சிவா பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

பொலிசார் சிவாவை கைது செய்து விசாரித்தபோது தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆசாராம் பாபு மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா குருகுல் விடுதியின் வார்டன் சில்பியுடன் உடல் உறவு கொண்டதாக சிவா தெரிவித்துள்ளார். இந்த குருகுல விடுதி ஆசாராம் பாபுவுக்கு சொந்தமானது.

ஆசாராம் ஷில்பிக்கு டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 2 பிளாட்டுகள் வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஷில்பி ஆசாராமுக்காக பல சிறுமிகள் மற்றும் பெண்களை ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பாராம்.

பாலியல் புகார் கொடுத்த 16 வயது சிறுமிக்கு ஆவி பிடித்திருக்கிறது என்றும், அவரை குணப்படுத்த ஆசாராம் பாபுவிடம் அழைத்துச் சென்று சில பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் ஷில்பியும் மற்றொரு விடுதியின் ஊழியர் கேசவும் அப்பெண்ணின் பெற்றோரை பயமுறுத்தி உள்ளனர்.

ஆவியை விரட்டுகிறேன் என்ற பெயரில் ஆசாராம் பாபு அந்த சிறுமியை தனி அறைக்குள் அழைத்துச் செல்ல வெளியே காவலுக்கு நின்றவர் சிவா.

அறைக்குள் நுழைந்ததும் ஆசாராம் விளக்கை அணைத்துவிட்டு சிறுமியை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். முத்தம் கொடுத்துள்ளார். இந்த தகவலை அந்த சிறுமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

அசாரம் பாபு!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com