கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் சிக்கினார் : இயக்குனருக்கு வலை வீச்சு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் சிக்கினார் : இயக்குனருக்கு வலை வீச்சு!

கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் சிக்கினார் : இயக்குனருக்கு வலை வீச்சு!

Written By NIsha on Wednesday, July 24, 2013 | 9:47 PM

சென்னையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் திருடிய பணத்தில் தான் சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை வட பழனி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளி செந்தில் என்ற குபேரனை(32) பொலிசார் வலை வீசித் தேடி வந்தனர்.

அவருக்கு திருட்டு வழக்குகளிலும் தொடர்பு உண்டு. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வடபழனி உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் செந்தில்குபேரனை தேடி வந்தனர். தனிப்படையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிக்கினார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. அவர் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். முதலில் வாய்ப்பு கிடைக்காததால் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். இருப்பினும் சினிமா தான் எனது கனவு ஆகும். கொள்ளை அடித்து சம்பாதித்த பணத்தில் ரூ.20 லட்சம் கொடுத்து, சினிமா உலகில் நுழைந்தேன். விடலைப்பட்டாளம் என்ற படத்தில் கதாநாயகன் வேடம் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பு வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் துணை நடிகர் வேடத்தில் வந்துள்ளேன்.

விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னதாக வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன் என்றார்.

இதையடுத்து சினிமா இயக்குனர் ஒருவரையும் மற்றும் சிலரையும் பொலிசார் தேடி வருகின்றனர். செந்தில்-குபேரன்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com