இந்தியாவை தாக்க: 9 பாகிஸ்தான் போராளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இந்தியாவை தாக்க: 9 பாகிஸ்தான் போராளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி!

இந்தியாவை தாக்க: 9 பாகிஸ்தான் போராளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 9:12 PM

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் போராளிகள் பயிற்றப்படுவதாக இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தாய்பா அமைப்பைச் சேர்ந்த 9 போராளிகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இவ்வாறான 3 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் நடுப்பகுதி வரையில், குறித்த போராளிகள் 9 பேரும் இடைக்கிடையில் பலதடவைகள் தமிழ் நாட்டுக்கு வந்து சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இலங்கையின் கடவுச் சீட்டுகளை பயன்படுத்துவதுடன், சிங்கள மீனவர்களின் உதவிகளுடன் தமிழகத்துக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மதுரை அல்லது மயிலாடு துறையை தாக்கக்ககூடும் என்று அதி முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மேலும் 8 பேருக்கு பாகிஸ்தானில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதாகவும் இந்திய புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வழியாக ஊடுருவி தாக்குதல்:

பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று, இலங்கை வழியாக தென்னிந்தியாவுக்குள் ஊடுறுவி பயங்கரவாத செயல்களில் ஈடுபட 8 பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மகாராஷ்டிர பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மத்திய உளவுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை மகாராஷ்டிர பொலிஸ் விடுத்துள்ளது.

தற்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாமில் இதற்காக இந்த 8 பேருக்கும் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 8 தீவிரவாதிகளில் 4 பேர் பஞ்சாபிகள் ஆவர். மற்றவர்கள் காஷ்மீரிகள் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு பேரையும் யாழ்ப்பாணம் அருகே கடல் பகுதியில் இறக்கி விட பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனனராம். அதாவது எப்படி மும்பைக்கு கடல் மார்க்கமாக 10 தீவிரவாதிகள் ஊடுருவினார்களோ அதுபோல.

இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு மதுரை அல்லது மயிலாடுதுறை என்று கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தென் மாநிலங்கள் அனைத்துமே மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுப் பிரிவுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 2ம் திகதி கொழும்பில் வைத்து 3 பாகிஸ்தானியர்கள் சிக்கினர். இவர்களை விசாரித்தபோது அடித்தி மும்பை, திருவனந்தபுரத்திற்கு இலங்கை கடவுச்சீட்டு மூலம் சென்றது தெரிய வந்தது. இந்திய உளவுப் பிரிவுகள் மேலும் கூறுகையில், சிங்கள மீனவர்களின் ஒத்துழைப்புடன், தமிழகம் அல்லது கேரளாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் வடிவமைத்துள்ளது.

இலங்கையை தங்களது சதித் திட்டத்தின் பாதையாக மாற்றி வருகின்றன பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள். லஷ்கர் இ தொய்பா தவிர, பப்பர் கல்சா, ஜெய்ஸ் இ முகம்மது, ஜமாத் உத் தவா, அல் உமர் முஜாஹிதீன், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இலங்கை வழியாக இந்தியாவைத் தாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

தங்களது தீவிரவாத செயல்களுக்கு இலங்கையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பேராபத்தில் முடியும் என்றும் உளவுப் பிரிவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன. என்ன செய்யப் போகிறது இந்தியா...? 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com