கல்கிஸ்ஸையில் ஓரினச் சேர்க்கையாளர் மையம் சுற்றி வளைப்பு: மூவர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கல்கிஸ்ஸையில் ஓரினச் சேர்க்கையாளர் மையம் சுற்றி வளைப்பு: மூவர் கைது!

கல்கிஸ்ஸையில் ஓரினச் சேர்க்கையாளர் மையம் சுற்றி வளைப்பு: மூவர் கைது!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 10:48 AM

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஓரினச் சேர்க்கையாளர் மையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரத்மலானை பிரதேசத்தில் தம்மிகாராம விஹாரைக்கு எதிரில் உள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இந்த ஓரின பாலியல் மையம் நடத்தப்பட்டுள்ளது.

மையத்தை நடாத்தி வந்த யுவதி ஒருவர் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் எஸ்.ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களிடமிருந்து 285 ஆணுறைகள், ஆபாச இறுவட்டுக்கள், ஜெல் வகைகள், பாலியல் விடயங்கள் உள்ளடங்கிய சஞ்சிகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் சேவை வழங்கப்பட்டு வருவதாகவும், மொரட்டுவ, கல்கிஸ்ஸ, ரத்மலானை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த மையத்திற்கு செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com