பன்சாலியின் புதிய படத்தில் குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா ராய்? - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பன்சாலியின் புதிய படத்தில் குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா ராய்?

பன்சாலியின் புதிய படத்தில் குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா ராய்?

Written By NIsha on Tuesday, August 6, 2013 | 9:53 PM

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய படத்தில் ஐஸவர்யா ராய் குத்துப் பாட்டுக்கு ஆடவிருப்பதாக மும்பையே பரபரத்துக் கிடக்கிறது.

ஐஸ்வர்யா ராய் திருமணமான பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து அவரை திரைக்கு இழுக்க கடுமையாக முயற்சித்தபடிதான் இருக்கிறார்கள் இயக்குனர்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் குத்துப்பாட்டுக்கு ஆடவிருப்பதாக புது பரபரப்பு கிளம்பியுள்ளது பாலிவுட்டில். சஞ்சய் லீலா பன்சாலி மிகப் பெரிய பாலிவுட் இயக்குனர். அவரது குஸாரிஸ் படத்தில் ஏற்கனவே 2010ம் ஆண்டு நடித்துள்ளார் ஐஸ்வர்யா. தற்போது ராம்லீலா என்ற படத்தை இயக்கி வருகிறார் பன்சாலி.

இப்படத்தின் நாயகி தீபிகா படுகோன். நாயகன் ரன்வீர் சிங். இந்தப் படத்தில் இப்போது ஐஸ்வர்யாவையும் இணைக்க விரும்புகிறார் பன்சாலி.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராயை ஐட்டம் பாட்டுக்கு ஆட வைக்க பன்சாலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தக் குத்துப்பாட்டு குறித்து ஐஸ்வர்யாவிடம் பன்சாலி பேசி விட்டாராம். இதுகுறித்து பரிசீலித்து வருகிறார் ஐஸ்வர்யா என்பதே புது செய்தி.

பன்சாலியும், ஐஸ்வர்யாவும் இதுவரை ஹம் தில் தே சுகே சனம், தேவதாஸ், குஸாரிஸ் ஆகிய 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com