புதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » புதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்!

புதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்!

Written By NIsha on Wednesday, August 7, 2013 | 12:03 AM

உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல் தொடர்பான தகவல்கள் இணையத்தின் ஊடாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

ஆம், 'சோல் வேவ் ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த ஹோட்டலானது டுவிட்டரை கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின், மஜோர்க்காவில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலின் பெரும்பாலான செயற்பாடுகள் மற்றும் தோற்றம் ஆகியன டுவிட்டரை அடிப்படையாகக் கொண்டது. குறித்த ஹோட்டலின் பெரும்பாலான அறைகள் டுவிட்டரின் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு டுவிட்டரை  கருப்பொருளாகக் கொண்ட களியாட்டங்கள் நடைபெறுவதுடன் நீல வர்ணத்தில் 'மொஜிடோ' போன்ற குடிபானங்களும் வழங்கப்படுகின்றன.

விருந்தாளிகள் ஹோட்டலுக்குள் நுழையும் போது அவர்கள் ஹோட்டலின் பிரத்தியேக டுவிட்டர் அப்ளிகேசன் ஒன்றை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். இதனை அவ் ஹோட்டலில் வழங்கப்படும் வை-பை வின் ஊடாக மட்டுமே உபயோகிக்க முடியும். பின்னர் இதனூடாக social wave ஹேஸ்டெக்கினைப் பயன்படுத்தி ஒருவொருக்கொருவர் டுவிட் செய்யமுடிவதுடன், படங்களை பரிமாற்றிக்கொள்ளவும், தனிப்பட்ட தகவல்களை அனுப்பவும் முடியும்.

விருந்தினர்களை டுவிட்டர் ஊடாக வரவேற்று அவர்களை உபசரிக்கும் பொருட்டு பணியாளர்களும் இவ் ஹோட்டலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இங்கு twitter party suites ரூம்களும் உள்ளன.

அறைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பார்களை fill my fridge என டுவிட்டரின் ஊடாக  தகவல் அளிப்பதன் மூலம் பூரணப்படுத்திக்கொள்ளலாம்.

sol wave house எனும் டிவிட்டர் கணக்கின் ஊடாக உணவு மற்றும் பானங்களை ஓடர் செய்துகொள்ளலாம்.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் twitter pool party  நடைபெறுகின்றது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com