இத்தாலி பேருந்து விபத்தில் 37 பேர் பலி: மேம்பாலத்திலிருந்து பள்ளத்தில் வீழ்ந்தது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இத்தாலி பேருந்து விபத்தில் 37 பேர் பலி: மேம்பாலத்திலிருந்து பள்ளத்தில் வீழ்ந்தது!

இத்தாலி பேருந்து விபத்தில் 37 பேர் பலி: மேம்பாலத்திலிருந்து பள்ளத்தில் வீழ்ந்தது!

Written By NIsha on Monday, July 29, 2013 | 11:06 AM

இத்தாலியில் பஸ்ஸொன்று மேம்பாலத்தில் இருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் தெற்கில் அவிலீனோ மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது 48 பேர் வரை பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுவதோடு அவர்களில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் இருந்த அனைவரும் யாத்ரீகர்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர்கள் சுற்றுலாப் பயணிகள் என பின்னர் தெரியவந்துள்ளது. எவ்வாறு விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில் முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பஸ்ஸின்  பிரேக் தொழிற்படாமையே விபத்துக்கு காரணமென ஒரு தகவலும், பஸ்ஸின் டயரொன்று வெடித்தமையினால் சாரதியால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக வேறொரு தகவலும் தெரிவிக்கின்றன. மேம்பாலத்திலிருந்து பஸ் கீழே வீழ்வதற்கு முன்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வேறு வாகனங்களுடன் மோதியுள்ளது.
பஸ்ஸின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்புப் பணிகள் தொடந்தும் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com