1½ ஆண்டு காதலில் ஊனமுற்ற பெண் கர்ப்பம்: திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 1½ ஆண்டு காதலில் ஊனமுற்ற பெண் கர்ப்பம்: திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது!

1½ ஆண்டு காதலில் ஊனமுற்ற பெண் கர்ப்பம்: திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது!

Written By NIsha on Monday, August 19, 2013 | 10:56 PM

ஊனமுற்ற பெண்ணை காதலித்து தாயாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி எனும் விவசாயி. இவரது மகள் வளர்மதி (வயது 23).

ஊனமுற்ற பெண்ணான இவரும், அதே பகுதியை சேர்ந்த குணா (26) என்பவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையே தனிமையில் சந்தித்து பேசும்போது திருமணம் செய்வதாக கூறி வளர்மதியிடம் அடிக்கடி குணா உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக வளர்மதி கர்ப்பம் அடைந்தார். கர்ப்பிணியான பின்னர் திருமணம் செய்து கொள்ளுமாறு வளர்மதி வற்புறுத்தியபோது குணா காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 14–ம் திகதி வளர்மதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து வளர்மதியின் தாய் செல்வி (54), குணா வீட்டுக்கு சென்று வளர்மதியை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

ஆனால் குணா திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து வளர்மதி இது குறித்து கோட்டக்குப்பம் பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குபதிவு செய்து குணாவை கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com