
ஜேர்மனியின் கிழக்கு நகரமான லேய்பிஜிக் (Leipzig) பகுதியில் ஏராளமான குழந்தைகள் சுகப்பிரசவ முறையில் பிறக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து லேய்பிஜிக் பல்கழைக்கழக மருத்துவமனையில் ஜேஸ்லின் என்ற பெண்னுக்கு 57.7 நீளமும் 6.11 கிலோ எடையுடன் கூடிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது ஜேர்மனியில் பிறந்த மிகப்பெரிய குழந்தையாக கருதப்படுகின்றது.
இது குறித்து மகப்பேறு மருத்துவர் ஹோல்கர் ஸ்டீபன் கூறுகையில், அப்பெண்மணி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலையில் தான் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்தவுடன் இன்சுலின் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2011ம் ஆண்டில் பெர்லின் நகரில் ஜிகாத்(Jihad) என்ற குழந்தையானது 6 கிலோ எடையுடன் சுகப்பிரசவ முறையில் பிறந்துள்ளது என கூறியுள்ளார். தற்போது பிறந்துள்ள இக்குழந்தையானது எதிர்காலத்தில் அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !