திருமணத்திற்கு மறுத்த பெண் மீது ஆத்திரம் அடைந்த வாலிபர் கொதி எண்ணெய் ஊற்றினார்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » திருமணத்திற்கு மறுத்த பெண் மீது ஆத்திரம் அடைந்த வாலிபர் கொதி எண்ணெய் ஊற்றினார்!

திருமணத்திற்கு மறுத்த பெண் மீது ஆத்திரம் அடைந்த வாலிபர் கொதி எண்ணெய் ஊற்றினார்!

Written By NIsha on Tuesday, July 30, 2013 | 3:45 AM

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் நீது ஜெய்சிங்கானி 21 என்ற பெண்ணை தெருவோரத்தில் சாப்பாடு கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார். தன் விருப்பத்தை, அந்தப் பெண்ணிடமும் தெரிவித்தார். முதலில், திருமணத்திற்கு சம்மதித்த அந்தப் பெண், பின், தன் மனதை மாற்றிக் கொண்டார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அமீத் தல்ரேஜா, கடந்த சனியன்று இரவு, நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று, அவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.

பலத்த காயமடைந்த நீது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான, தல்ரேஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com