காதலுக்கு மரியாதையில் இருந்து எகிற ஆரம்பித்த விஜயின் தற்போதைய சம்பளம் என்ன தெரியுமா? - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » காதலுக்கு மரியாதையில் இருந்து எகிற ஆரம்பித்த விஜயின் தற்போதைய சம்பளம் என்ன தெரியுமா?

காதலுக்கு மரியாதையில் இருந்து எகிற ஆரம்பித்த விஜயின் தற்போதைய சம்பளம் என்ன தெரியுமா?

Written By NIsha on Monday, July 29, 2013 | 9:31 PM

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் நாயகர்களுக்கு இணையே கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை.

ஆனால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, அட சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டன.

விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை.


தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் முடிந்ததும் ‘முருகா’ படத்தை இயக்கிய நேசன் இயக்க இருக்கிறார்.  விஜய்யை வைத்து மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் தயாரித்த சூப்பர் குட்  பிலிம் ஆர்.பி.சௌத்ரி இந்த படத்தை தயாரிக்கிறார். இவரிடமிருந்து இப்போதே ஜில்லா படத்தின் உரிமையை கைப்பற்றியதோடு படத்தின் முன்தயாரிப்பு பணிகளுக்காக பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்திருகிறார்களாம்.

ஜில்லாவுக்காக 5 கோடி ரூபாய் விஜய்க்கு முற்பணம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் தற்போது விஜய்க்கு ஒரு படத்துக்கான சம்பளம் 18.5 கோடி ரூபாய் என்று தகவல் கிடைக்கிறது. ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் ஊதியம் வாங்கக் கூடியவராக இருக்கிறார் என்கிறார்கள்.

காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com