மகளின் அறையில் பதுங்கியிருந்த கணக்கு வாத்தியாரை கையும் களவுமான பிடித்த தாய்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மகளின் அறையில் பதுங்கியிருந்த கணக்கு வாத்தியாரை கையும் களவுமான பிடித்த தாய்!

மகளின் அறையில் பதுங்கியிருந்த கணக்கு வாத்தியாரை கையும் களவுமான பிடித்த தாய்!

Written By NIsha on Tuesday, July 30, 2013 | 1:09 AM

தனது மகளின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த தாய் ஒருவர், கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த கணக்கு வாத்தியாரை கையும் களவுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது 16. கணக்கு வாத்தியாரின் வயது 35.

கடந்த சில நாட்களாக தனது மகள் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருவதைப் பார்த்தார் தாயார். இதனால் அவருக்கு மகள் மீது சந்தேகம் வந்தது. ஒரு நாள் மகளுக்காக காத்திருந்தார் தாயார். மகளும் வழக்கம் போல தாமதமாக வந்தார். மகளுக்குத் தெரியாமல் காத்திருந்த தாயார், தடாலடியாக மகளின் அறைக்குள் புகுந்தார். அறை முழுவதும் தேடினார். கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தபோது அதிர்ந்தார் அங்கு மகளின் கணக்கு வாத்தியார். உடனடியாக அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். பொலிஸார் வந்து வாத்தியாரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர்.

தினசரி தாயாருக்குத் தெரியாமல் தனது கணக்கு வாத்தியாரை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளார் அந்த மாணவி. இது தனது தாயாருக்குத் தெரியாது என்றும் நினைத்துள்ளார். ஆனால் மகள் மீது சந்தேகமடைந்த தாயாரின் அதிரடி நடவடிக்கையால் இருவரும் சிக்கினார்கள்.

அந்த ஆசிரியர் மீது தற்போது பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com