உல்லாசம் அனுபவிக்க சென்றவரின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உல்லாசம் அனுபவிக்க சென்றவரின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில்!

உல்லாசம் அனுபவிக்க சென்றவரின் உயிரற்ற உடல் ஹோட்டல் அறையில்!

Written By NIsha on Monday, July 29, 2013 | 7:27 AM

பெண் ஒருவருடன் ஹோட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் அவ்வறையில் உயிரிழந்துள்ளார்.

கல்கிசையைச் சேர்ந்த பெண்ணுடன் உயிரிழந்த நபர் மகரகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை வாடகைக்கு பெற்றுள்ளார். தெஹிவளை நகரசபையில் சேவையாற்றும் 56 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 37 வயதான பெண் ஒருவருடன் இன்று காலை அறையை வாடகைக்கு பெற்றுள்ளார். எனினும், அறையை வாடகைக்கு எடுத்து ஒரு மணிநேரத்திலேயே 56 வயதான குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மகரகம பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். உள்ளாடையுடன் நிலத்தில் வீழ்ந்திருந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் உறுதிசெய்தாக ஹோட்டல் உரிமையாளரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் உயிரிழந்த ஹோட்டல் அறையிலிருந்து மதுபானப் போத்தல், பொதிசெய்யப்பட்ட பணிஸ் மற்றும் 98,000 ரூபா வைப்பிலிட்ட நிலையில் வங்கிக் கணக்குப் புத்தகம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா கலந்த பீடியை குறித்த நபர் இறப்பதற்கு முன்னர் புகைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த 56 வயதான நபருக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அதன் பொருட்டே அவர்கள் இருவரும் குறித்த ஹோட்டல் அறையில் தங்கியிருக்க வேண்டுமெனவும் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர். எனவும் பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com