மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

Written By NIsha on Tuesday, July 30, 2013 | 8:58 PM

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் பிள்ளையாரடிப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com