கோட்டை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கோட்டை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது!

கோட்டை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது!

Written By NIsha on Saturday, August 31, 2013 | 9:32 AM

கொழும்பு - கோட்டை நகரில் விபச்சார தொழிலில் ஈடுபடும் முகமாக நடமாடித் திரிந்த 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் கோட்டை பொலிஸாரால் நேற்று இரவு வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 10 பெண்களும் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கோட்டை ரயில் நிலையப் பகுதி, ஒல்கோட் மாவத்தை, ஒல்கோட் மாவத்தையை அண்டிய குறுக்கு தெருக்கள் மற்றும் குணசிங்கபுர வீதிகளில் தினமும் மாலை இரவு நேரங்களில் விபச்சார தொழிலில் ஈடுபடும் நோக்கிலான பெண்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கொழும்பில் இருந்து கூலி வேலை செய்யும் பிற மாவட்ட இளைஞர்கள் மற்றும் திருமணமான முதியவர்கள் கூட தவறான வழிக்குச் செல்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com