
தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் வைத்தியரால் கருக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு அதிக இரத்தக் கசவு காரணமாக மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மஸ்கெலிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டு நேற்று (03) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குறித்த வைத்தியர் 10 ரூபா ரொக்கப் பிணையிலும் 50,000 ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !