பஸ் பயணிகளுக்கு கத்திக்குத்து: 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பஸ் பயணிகளுக்கு கத்திக்குத்து: 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலி!

பஸ் பயணிகளுக்கு கத்திக்குத்து: 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலி!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 9:59 PM

சீனாவில் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளை நபரொருவர் கத்தியால் தாக்கியதில் 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலியாகியுள்ளர்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை சரமாரியாக வெட்டினான்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த 10 மாத கைக்குழந்தை இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். கத்தியால் வெட்டிய ஆசாமி பஸ்சில் இருந்து எகிறி குதித்து தப்பித் தலைமறைவானான். படுகாயமடைந்த 15 பேரையும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

போகும் வழியிலேயே 10 வயது சிறுவன் ஒருவனும், மற்றொரு 18 வயது வாலிபரும் பலியாகினர்.

இந்த அகோர தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய ஆசாமியை பிடிக்க 400 பொலிசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com