14 வயது சிறுமிகள் துஷ்பிரயோகம்: 58 வயது குடும்பஸ்தர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 14 வயது சிறுமிகள் துஷ்பிரயோகம்: 58 வயது குடும்பஸ்தர் கைது!

14 வயது சிறுமிகள் துஷ்பிரயோகம்: 58 வயது குடும்பஸ்தர் கைது!

Written By NIsha on Saturday, August 17, 2013 | 2:46 AM

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  வசிக்கும் 14 வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாகக் கூறப்படும் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இச் சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான வீட்டுக்கு வார இறுதி நாட்களில் வருகைதருவார்.

இந்நிலையில் அயலில் வசிக்கும் அவரது உறவினரான 14 வயதுடைய சிறுமியை வீட்டுக்கு அழைத்து குறித்த சந்தேகநபர் சில காலமாக இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தி வந்துள்ளார்.

அதன் பின்னர் அச்சிறுமியினூடாக அவரது நண்பியையும் வரவழைத்து அவரையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உற்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சநதேக நபரை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com