15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொலைக்காட்சி நடிகர்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொலைக்காட்சி நடிகர்!

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொலைக்காட்சி நடிகர்!

Written By NIsha on Monday, August 19, 2013 | 5:00 AM

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. 15 வயது சிறுமியை இந்த நடிகர் நர்சரி ரைம்ஸ் பாடி மயக்கி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதை விடக் கொடுமை அந்த சிறுமியிடம், பாடசாலை சீருடை அணிந்து கொள்ளுமாறு கூறி அதற்குப் பிறகு நாச வேலையில் ஈடுபட்டுள்ளார் அந்த நடிகர். இந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. இப்போது அந்த சிறுமிக்கு வயது 39 ஆகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் கூறுகையில்,

என்னை பலாத்காரம் செய்த நபர் பிரபலமான தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் ஆவார். எனக்கு 15 வயதாக இருக்கும்போது ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கு மது கொடுத்தார். அதன் பிறகு என்னிடம் பாடசாலை சீருடையை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு Ride A Cock Horse To Banbury Cross என்ற நர்சரிப் பாடலை பாடியபடி என்னை மயக்கி ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு சென்று பின்னர் பாலியல் உறவு வைத்துக் கொண்டார்.

இதுகுறித்து நான் உடனடியாக பொலிஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் சமீபத்தி்ல இந்த நடிகர் மீது வேறு ஒரு புகார் எழுந்ததைத் தொடர்ந்து எனக்குத் தைரியம் வந்து இப்போது இதை நான் கூற முன்வந்தேன். அப்போது நடந்ததில் எனக்கும் பாதி பங்குண்டு என்பதால் நான் புகார் தர உடனடியாக நினைக்கவில்லை. ஆனால் எனக்கு நேர்ந்தது கொடுமை என்று இப்போது நான் உணர்ந்துள்ளேன்.

அப்போது நான் மைனர் பெண். எனவே எனக்கு நேர்ந்த கொடுமைக்கு அந்த நடிகர்தான முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் அப்பெண்.

தற்போது இப்பெண் திருமணமாகி அரசு வேலையில் இருக்கிறார். 3 குழந்தைகளுக்குத் தாயாவார். சம்பந்தப்பட்ட நடிகர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com