எய்ட்ஸ் நோயாளிக்கு 16 வயது மகளை பலி கொடுத்த கொடூரத் தாய்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » எய்ட்ஸ் நோயாளிக்கு 16 வயது மகளை பலி கொடுத்த கொடூரத் தாய்!

எய்ட்ஸ் நோயாளிக்கு 16 வயது மகளை பலி கொடுத்த கொடூரத் தாய்!

Written By NIsha on Friday, August 23, 2013 | 11:27 AM

மும்பை அருகே தனது 16 வயது மகளை எய்ட்ஸ் நோயாளிக்கு கட்டாயத் திருமணம் செய்து கொடுத்து அவரை கற்பழிக்க உதவிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தானேவில் உள்ள கல்வா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நபர் ஒருவருக்கு தனது 16 வயது மகளை கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். அந்த நபருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் கல்லூரியில் படிக்கும் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். காரணம் உங்கள் பெண்ணை நான் மணந்தால் உங்களின் குடும்பச் செலவையும், உங்கள் மகளின் கல்விச் செலவையும் ஏற்கிறேன் என்று கூறியது தான்.

தன் தாய் தன்னை எய்ட்ஸ் நோயாளிக்கு திருமணம் செய்து வைப்பது எதிர்த்து அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் ரயிலில் ஏறிய அவரை அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்தார். நீ மட்டும் அவரை திருமணம் செய்யாவிட்டால் என்று கூறி பினாயிலை குடித்துள்ளார் அந்த பெண். தாயின் செயலைப் பார்த்து பயந்த சிறுமி வேறு வழியாமல் அந்த நபரை மணந்தார்.

திருமணம் முடிந்தாலும் அந்த நபருடன் சிறுமி குடும்பம் நடத்த விரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் அவரின் கைகளை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து நோயாளி மருமகனை மகளை கற்பழிக்குமாறு கூறியுள்ளார். அதன் பிறகும் எப்பொழுதெல்லாம் அவர் உறவுக்கு மறுக்கிறாரோ அப்பொழுதெல்லாம் இதே போன்று அடித்தும், அல்லது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்தும் கொடுத்து மருமகனை உறவு கொள்ளுமாறு கூறியுள்ளார் அந்த கொடூரத் தாய்.

இனியும் சிறுமியை தன்னை கணவராக ஏற்க வைக்க முடியாத என்று நினைத்த அந்த நபர் அவரை கடந்த 1ம் தேதி விவாகரத்து செய்தார்.

இதையடுத்து சிறுமி அவரது தாயால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். கொடுமை தாங்க முடியாமல் அவர் இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கூற அவர் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொள்ள உதவியுள்ளார்.

இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த தலைமறைவாகியுள்ள சிறுமியின் தாயையும், அந்த நபரையும் தேடி வருகின்றனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com