2 வருடங்களாக 12 வயது சிறுமி துஸ்பிரையோகம்: 62 வயது நபர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 2 வருடங்களாக 12 வயது சிறுமி துஸ்பிரையோகம்: 62 வயது நபர் கைது!

2 வருடங்களாக 12 வயது சிறுமி துஸ்பிரையோகம்: 62 வயது நபர் கைது!

Written By NIsha on Saturday, August 31, 2013 | 11:20 PM

12 வயதான பாடசாலைச் சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த 62 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வென்னப்புவ பிரதேசத்தில் தனது தாய் மற்றும் சகோதரிகள் இருவருடன் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார்.

அந்த வீட்டின் உரிமையாளரே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி வரை சந்தேகநபரால் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் தாயார் வென்னப்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com