தாயின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாக். காதலனுடன் ஓடிய இந்திய பெண் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தாயின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாக். காதலனுடன் ஓடிய இந்திய பெண் கைது!

தாயின் 20 கிலோ தங்க நகைகளுடன் பாக். காதலனுடன் ஓடிய இந்திய பெண் கைது!

Written By NIsha on Thursday, August 15, 2013 | 7:18 AM

தாயின் 20 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தனது பாகிஸ்தான் காதலருடன் தப்பிச் செல்ல முற்பட்ட இந்திய இளம் பெண் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துபாயில் வசித்து வரும் இந்திய பெண்மணி ஒருவர் தாயகம் திரும்ப திட்டமிட்டார். இதற்காக, தன்னிடம் உள்ள 20 கிலோ தங்க நகைகளை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயன்ற அவர், இதுதொடர்பாக ஷார்ஜா விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் அனுமதி பெறுவதற்காக தனது இளம்வயது மகளுடன் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வாடகை காரில் வந்தார்.

முதலில் அதிகாரிகளிடம் பேசிவிட்டு நகைகளை கொண்டு செல்லலாம் என நினைத்த அவர், மகளின் பொறுப்பில் நகைகளை ஒப்படைத்துவிட்டு காரிலேயே அமர்ந்திருக்கும்படி கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அதிகாரிகளிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்த்த அவர், மகள் அமர்ந்திருந்த கார் நகைகளுடன் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

தனது மகளை 20 கிலோ தங்க நகைகளுடன் யரோ கடத்திச் சென்று விட்டதாக பொலிசில் புகார் அளித்தார். விசாரணையை தொடங்கிய பொலிசார் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொள்ள நினைத்தபோது அவளது கைபேசி ´ஸ்விட்ச் ஆஃப்´ செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஷார்ஜாவில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷார்ஜாவின் இன்னொரு விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற அந்த இந்திய பெண்ணை பொலிசார் சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவளிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, ´ஷார்ஜாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தாயார் விமான நிலையத்திற்குள் சென்றதும், அதே காரில் பாகிஸ்தான் காதலன் வீட்டிற்கு சென்று 20 கிலோ தங்க நகைகளையும் அவரிடம் ஒப்படைத்ததாகவும், நகைகளுக்கான அனுமதியை பெற்ற பின்னர் நான் பாகிஸ்தானுக்கு வருகிறேன். நீ முதலில் விமானம் ஏறி பாகிஸ்தானில் உள்ள என் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியிரு என்று காதலர் கூறியதால் விமானம் ஏற வந்து பொலிசில் சிக்கிக் கொண்டதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்தாள்.

இதனையடுத்து, தனது நகைகளை திருடிக்கொண்டு மகள் தலைமறைவாகி விட்டதாக தாயார் புதிதாக பொலிசில் புகார் அளித்தார்.

பாகிஸ்தான் காதலனுடன் அந்த இளம்பெண்ணை கைது செய்த பொலிசார் ஷார்ஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com