தமிழகமெங்கும் 20-ஆம் தேதி ‘தலைவா’ ரிலீஸ்: நாளை முதல் ‘முன்பதிவு’! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தமிழகமெங்கும் 20-ஆம் தேதி ‘தலைவா’ ரிலீஸ்: நாளை முதல் ‘முன்பதிவு’!

தமிழகமெங்கும் 20-ஆம் தேதி ‘தலைவா’ ரிலீஸ்: நாளை முதல் ‘முன்பதிவு’!

Written By NIsha on Saturday, August 17, 2013 | 10:11 AM

பல சிக்கல்களைத் தாண்டி தமிழகத்தில் ‘தலைவா’ படம் வருகிற 20-ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கான முன்பதிவும் நாளைமுதல் ஆரம்பமாகிறது.

தயாரிப்பாளர் ஓ.கே சொன்னால் நாளையே ‘தலைவா’ படத்தை தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் தைரியமாக ரிலீஸ் செய்யத் தயார் என்று தி.மு.க எம்.எல்.ஏவும், தயாரிப்பாளருமான இன்று சொல்லியிருந்தார்.

ஆனால் தற்போது அந்தப்படத்தை வாங்கியிருக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் வருகிற 20-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. 2 வாரங்களாகியும் தலைவா படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியாததால் மன அழுத்தத்துக்கு உள்ளான தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தற்போது ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹீரோ விஜய்யும் இந்த விஷயத்தில் மெளனமாக இருக்க, இனிமேலும் தாமதித்தால் படத்துக்கு வசூல் சுத்தமாக வராது என்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் ஜெ.அன்பழகன் தானாக முன் வந்து இன்று தலைவாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அவரின் இந்த திடீர் அறிவிப்பை கொஞ்சமும் எதிர்பார்க்காத வேந்தர் மூவிஸ் நிறுவனம் தற்போது ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய தைரியமாக களமிறங்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வேந்தர் முவீஸிடமிருந்து படத்தை வாங்கியிருக்கும் மற்ற வினியோகஸ்தர்களும் இந்த பங்கு பெற்றுள்ளனராம்.

அதனடிப்படையில் வருகிற 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகமெங்கும் தலைவா படம் ரிலீஸாகும் என்று தெரிகிறது. மேலும் படத்துக்கான முன்பதிவும் நாளைமுதல் (18-08-2013) ஆரம்பமாகிறது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com