திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த பத்தினி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த பத்தினி!

திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த பத்தினி!

Written By NIsha on Friday, August 23, 2013 | 11:21 PM

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது கணவரை பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் மனமுடைந்த மணிமேகலா தற்கொலை செய்வதென முடிவு செய்தார். அதன்படி கடந்த 19–ந் திகதி அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க முயன்றார்.

அந்த சமயம் ராஜேந்திரன் வரவே, குளிர்பானத்தை அவரிடம் கொடுத்துவிட்டார். அதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் ராஜேந்திரன் குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாயர்புரம் பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் விசாரணை நடத்தி மணிமேகலாவை கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com