3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

Written By NIsha on Wednesday, August 28, 2013 | 10:12 PM

நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பூதத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். பெயின்டர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு சங்கீதா(17), சங்கவி(13), ஜனனி(10) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். சங்கீதா பிளஸ் 2வும், சங்கவி 8ம் வகுப்பும், ஜனனி 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

பார்த்திபன் சரியாக வேலைக்கு செல்வதில்லை. மேலும் வேலைக்கு சென்று கிடைக்கும் ஊதியத்தை வீட்டில் கொடுக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். இதனால் தமிழ்செல்வி குடும்பம் நடத்த சிரமப்பட்டார். குழந்தைகள் படிப்புக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கிடைக்காமல் திண்டாடினார்.

இதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தமிழ்செல்வி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷத்தை குடித்துவிட்டார். மயங்கி விழுந்த 4 பேரையும் உடையார்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திப்பு போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com