மனைவி தூங்கும்போது 3 வயது மகளை கற்பழித்த கொடூர தந்தை. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மனைவி தூங்கும்போது 3 வயது மகளை கற்பழித்த கொடூர தந்தை.

மனைவி தூங்கும்போது 3 வயது மகளை கற்பழித்த கொடூர தந்தை.

Written By NIsha on Friday, August 23, 2013 | 12:25 AM

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையால் கற்பழிக்கப்பட்டுள்ள கொடூர சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி. இவருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று கணேஷ் அவரது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது மகளை வீட்டுக்கு வெளியே தூக்கிச் சென்று மகள் என்றும் பாராமல் சிறுமியை கற்பழித்துவிட்டு வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காயப்பட்டு கிடந்த சிறுமியை ஜே.கே லோனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் காலையில் எழுந்தபோது மகளைக் காணாமல் கணேஷின் மனைவி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் கணேஷ் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com