சிறைக்குள் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்: 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கிய அரசு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சிறைக்குள் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்: 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கிய அரசு!

சிறைக்குள் சிறுநீர் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபர்: 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கிய அரசு!

Written By NIsha on Thursday, August 1, 2013 | 10:47 AM

போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். அதில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக டேனியேல் சாங் என்ற 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அந்த இளைஞரை நாலரை சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்தனர். விசாரணை முடிந்து வெளியில் சென்ற போலீச் அதிகாரிகள் அறைக்குள் டேனியலை வைத்துப் பூட்டியதை மறந்து போனார்கள்.

கிட்டத்தட 5 நாட்கள் ஜன்னல் வசதி கூட இல்லாத அந்த சின்ன அறைக்குள் அடை பட்டுக் கிடந்த டேனியல், உண்ண உணவும் ,குடிக்க நீரும் இன்றி அவதிப் பட்டுள்ளான். தாகத்திற்கு தனது சிறுநீரை தானே பருகியதால் அவனது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. 5வது நாள் எதேச்சையாக சிறைக்கதவைத் திறந்த போலீசார், அங்கு டேனியல் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டனர்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டேனியல் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பறகு பூரண குணமடைந்தான். போலீசாரின் அஜாக்கிரதையால் வாலிபர் பாதிக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பிரசுரம் செய்யப்பட்டது. இதனைக் கண்டு மக்கள் போலீசார் மீது கடும் கோபமடைந்தனர். டேனியல் சார்பாக கோர்ட்டில் போலீசார் மீது வழக்கு தொடரப்பட்டது.

டேனியேல் சாங் தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் இது குறித்து கூறும்போது, 'எனது கட்சிக்காரருக்கு நேர்ந்த கொடுமை இந்த உலகத்தில் எவருக்குமே நேரக் கூடாது. அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்றார்.

வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு, டேனியேல் சாங்குக்கு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கி கோர்ட்டுக்கு வெளியே அமெரிக்க அரசு சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது..

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com