50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்!

50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்!

Written By NIsha on Thursday, August 1, 2013 | 8:19 AM

தற்போது நீங்கள் காணப்போகும் கதை உண்மையே. கடந்த 400 ஆண்டுகளில், இது போன்ற 300 நிகழ்வுகள் மருத்துவ வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

அதில் இப்போது ஒரு நிகழ்வைப் பார்க்கப் போகிறோம். அது என்னவென்றால், 50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து பெற்றெடுத்த ஒரு பெண்ணின் கதை. கடந்த 1955 ஆம் ஆண்டு காஸாபிளான்கா என்னும் சிறிய கிராமத்தில் ஒரு இளம் பெண் பிரசவ வலியில் துடித்தாள். 48 மணிநேரமாகியும், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை.

அதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவர்களால், அந்த பெண்ணுக்கு எதற்கு குழந்தை பிறக்கவில்லை என்று தெரியவில்லை. வலியால் மயக்கமடைந்த அப்பெண்ணை சத்திரசிகிச்சை அறையில் வைத்திருந்தனர். மயக்கம் தெளிந்த பின்னர் அப்பெண் மாயமானார். பல நாட்களுக்கு வலி தொடர்ந்த நிலையில், அப்பெண்ணுக்கு திடீரென்று வலியானது நின்றுவிட்டது. அதனால் அப்பெண்ணும் குழந்தை பிறந்த சில நாட்கள் ஆகுமென்று, கர்ப்பமாக இருப்பதை அப்படியே விட்டுவிட்டார்.

சஹ்ரா மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து, பாட்டி ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 75 வயதாகிறது.

இந்த நிலையில் திடீரென்று அவருக்கு கடுமையான வலியானது ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்றார். எந்த ஒரு மருத்துவராலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் வலிக்கு காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை. அப்போது ஒரு மருத்துவர் சஹ்ராவின் வீக்கமடைந்த வயிற்றினைப் பார்த்து, ஒருவேளை அது கருப்பைக் கட்டியாக இருக்குமோ என்று நினைத்து, ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது ஸ்கேனிங் ரிப்போர்ட்டைப் பார்த்தால், அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அது என்னவென்றால், சஹ்ராவின் வயிற்றில் காரைபடிந்த குழந்தையானது இருக்கிறது.

அத்தகைய குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த குழந்தை கருப்பைக்கு வெளியே, சஹ்ராவின் உள்ளுறுப்புகளுடன் இணைந்து இறந்துள்ளது. இத்தகைய நிலையில் உள்ள குழந்தையை 'லித்தோபீடியான்' (Lithopedion), அதாவது 'கல் குழந்தை' என்று சொல்வார்கள்.

எனவே மருத்துவர்கள் சிசேரியன் மூலம் அந்த கல் குழந்தையை வெளியேற்ற முடிவு செய்தார்கள். பொதுவாக இந்த சிசேரியனின் போது, அதிகப்படியான இரத்த வெளியேறும் என்பதால், தாய் இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சஹ்ராவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com