பிரபல சுற்றுலாத்தலத்தில் நிர்வாண நீச்சலடித்த 8 பொலிஸார் பணிநீக்கம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பிரபல சுற்றுலாத்தலத்தில் நிர்வாண நீச்சலடித்த 8 பொலிஸார் பணிநீக்கம்!

பிரபல சுற்றுலாத்தலத்தில் நிர்வாண நீச்சலடித்த 8 பொலிஸார் பணிநீக்கம்!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 8:44 AM

சீனாவில் சுற்றுலாத் தலத்தில் நிர்வாணமாக நீச்சல் அடித்த 8 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள லுஷான் கவுன்ட்டியில் 8 ஆண் பொலிஸ் அதிகாரிகள், பிரபல சுற்றுலாத்தலத்திற்கு சென்று அங்குள்ள ஆற்றில் ஆடையின்றி நீந்தியுள்ளனர்.

மேலும் கரையோரத்தில் ஆடையின்றி நின்றுள்ளனர். அருகில் பொலிஸ் ஜீப்பை நிறுத்தி வைத்துள்ளனர். ஆற்றங்கரையில் அவர்களின் சீருடை கிடந்துள்ளது. அவர்களின் இந்த நிர்வாண கோலத்தை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் போட்டுவிட்டனர்.

இந்த புகைப்படங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் பொலிசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அந்த 8 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com