விபச்சார விடுதி முற்றுகை: 8 பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » விபச்சார விடுதி முற்றுகை: 8 பெண்கள் கைது!

விபச்சார விடுதி முற்றுகை: 8 பெண்கள் கைது!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 12:10 AM

கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் டிக்சன் பகுதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (19) மாலை மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது குறித்த விடுதியை இயக்கிச் சென்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் யக்கலமுல்ல, ஓப்பநாயக்க, மதவாச்சி மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எண்மரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இரு பெண்களும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, விபச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com