9 வயது மகனை சுட்டுக் கொன்ற தந்தை தானும் தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 9 வயது மகனை சுட்டுக் கொன்ற தந்தை தானும் தற்கொலை!

9 வயது மகனை சுட்டுக் கொன்ற தந்தை தானும் தற்கொலை!

Written By NIsha on Tuesday, August 13, 2013 | 9:17 AM

அமெரிக்காவில் 9 வயது மகனை கொன்று தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மான்செஸ்டர் அருகே நியூஹாம்ஷைர் என்ற இடத்தில் ஒய்எம்சிஏ அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் முனிசாவ்யான் (54). இவருக்கு ஜோஸ்வா சாவ்யான் என்ற 9 வயது மகன் இருந்தான்.

நேற்று காலை 10 மணியளவில் அவரது அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பார்த்த போது, அங்கு முனி சாவ்யானும், ஜோஸ்வா சாவ்யானும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலில் உள்ள முனிசாவ்யானின் சகோதரர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில் இருந்து முனிசாவ்யான் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தனது நண்பர்களுக்கு அனுப்பிய இ மெயிலில், ‘வாழ்க்கையே வெறுத்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை? எனக்கு பிறகு எனது மகனின் நிலையும் என்ன ஆகும் என்றும் தெரியவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இதனால் சகோதரர் இறந்த துக்கம் காரணமாக மன உளைச்சலில் இருந்த முனி சாவ்யான் தனது 9 வயது மகனை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறினர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com