இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர்கள் பட்டியலில் ரஜனி முதலிடத்தில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர்கள் பட்டியலில் ரஜனி முதலிடத்தில்!

இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர்கள் பட்டியலில் ரஜனி முதலிடத்தில்!

Written By NIsha on Saturday, August 31, 2013 | 11:36 PM

கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.

இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

இணையத்தில் உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன்.

அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன.

அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com