யாழில்- சூடு பிடிக்கும் பிரசாரங்களும்: துப்பாக்கிச் சூடுகளும்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » யாழில்- சூடு பிடிக்கும் பிரசாரங்களும்: துப்பாக்கிச் சூடுகளும்!

யாழில்- சூடு பிடிக்கும் பிரசாரங்களும்: துப்பாக்கிச் சூடுகளும்!

Written By NIsha on Tuesday, August 27, 2013 | 8:43 PM

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைக்கலப்பு துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளது.

சாவகச்சேரி பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் கனகசிங்கம் நந்தகுமார் (வயது 29) என்பவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். விஸ்வராஜா விஜயரூபன் (வயது 30) என்பவர் அடிகாயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவரிவருவதாவது:

சாவகச்சேரி பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்களுக்கும், சர்வானந்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பே துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து சாவகச்சேரி பிரதேசம் எங்கும் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ் நிலை காணப்படுகின்றது.

அதேவேளை யாழில் இருந்து கண்டி நெடுஞ்சாலையால் செல்லும் வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் என்பன கைதடி பாலத்தடியில் சோதனைக்கு உட்படுத்தபடுவதுடன் வாகனத்தில் சொல்வோரும் கீழே இறக்கி சோதனைக்கு உட்படுத்தபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com