பிளம்ஸ் திருடிய பதினொரு வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பிளம்ஸ் திருடிய பதினொரு வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

பிளம்ஸ் திருடிய பதினொரு வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

Written By NIsha on Saturday, August 10, 2013 | 6:50 AM

ஜேர்மனில் ஒய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் பிளம்ஸ் பழம் திருடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் (North Rhine-Westphalia) வசிக்கும் 79 வயது முதியவர் ஒருவர்தனது தோட்டத்தில் உள்ள பிளம்ஸ் மரத்தினை வேலி அமைத்து பாதுகாத்து வந்தார்.

இந்நிலையில் 3 சிறுவர்கள் இவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் பிளம்ஸ் பழத்தினை திருட்டுத்தனமாக பறித்துள்ளனர். இதனைக் கண்ட முதியவர் அவர்களை எச்சரித்துள்ளார். ஆனால் இவரின் எச்சரிக்கையை அச்சிறுவர்கள் அலட்சியம் செய்ததால் கோபம் கொண்ட முதியவர் துப்பாக்கியால் சிறுவர்களை குறிபார்த்து சுட்டதில் பதினொரு வயது சிறுவனுக்கு காயம் பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து அந்த முதியவரின் மீது விசாரணை நடத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com