பலாத்காரத்திற்குப் பின் அந்த இடத்தை சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » பலாத்காரத்திற்குப் பின் அந்த இடத்தை சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்!

பலாத்காரத்திற்குப் பின் அந்த இடத்தை சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்!

Written By NIsha on Sunday, August 25, 2013 | 11:09 AM

மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்தவர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு படம் பார்த்துவிட்டு, நிம்மதியாக தூங்கியுள்ளனர்.

மும்பையில் உள்ள செயல்படாத மில்லில் வைத்து பத்திரிக்கைப் புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சந்த் பாபு சத்தார் ஷேக், சிராஜ் ரஹ்மான்(20), விஜய் மோகன் ஜாதவ்(18), சலீ்ம் மற்றும் காசிம் பங்காலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜாதவ் பாம்பே மெட்ரோ கார்பரேஷன் ஊழியரின் மகன். அவர் தோபி தலாவ் பகுதியில் வசித்து வந்தார். அவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று ஜாதவ் போதைப் பொருள் அடிமையான சலீமை சந்தித்து அவருடன் தம்மடிக்க சக்தி மில்லுக்கு சென்றுள்ளார். அவர் மில்லுக்கு செல்லும் வழயில் பத்திரிக்கை பெண்ணும், அவரது நண்பரும் மில்லுக்கு செல்லும் வழியை அவர்களிடம் கேட்டுள்ளனர். சலீம் அவர்களுக்கு வழியைக் காட்டிவிட்டு காசிமுக்கு போன் போட்டு சிராஜ் மற்றும் அஷ்ரபுடன் மில்லுக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் ஒன்று கூடியவுடன் அவர்கள் அப்பெண்ணை சந்தித்து மில் பகுதியில் நடந்த கொலைகள் குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் ஒருவர் அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து அதன் கூர் பகுதியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு சுவருக்கு பின்னால் அழைத்துச் சென்று அவரது கையை கயிற்றால் கட்டியுள்ளனர். அவருடன் வந்த ஆண் பத்திரிக்கையாளரை தாக்கிவிட்டு அவர்கள் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.

அதன் பிறகு அந்த 5 பேரும் எதுவும் நடக்காதது போன்று ஜாதவின் வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்தபோது போலீசார் தேடுவதை அறிந்து பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் சிராஜும், ஜாதவும் அன்று முழுவதும் ஒன்றாகவே இருந்துள்ளனர். மாலையில் அக்ரிபதாவில் புகைபிடித்துள்ளனர். அதன் பிறகு ஜாதவ் வீடியோ பார்லர் சென்று மாலை முழுவதும் படம் பார்த்துவிட்டு அங்கேயே தூங்கிவிட்டார். ஜாதவ் பார்லரில் இருப்பது தெரிந்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

பலாத்காரத்திற்குப் பின் சுத்தம் செய்யப் பணித்த குற்றவாளிகள்!

கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த 5 குற்றவாளிகளும், சம்பவத்திற்குப் பின்னர் அந்தப் பெண்ணையே அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர்.

மேலும் அவரை தங்களது செல்போன் வீடியோவில் படம் எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் சொன்னால் நெட்டில் போட்டு விடுவோம் என்றும் மிரட்டிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாத்காரத்திற்குப் பின்னர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அட்டூழியத்தையும் செய்துள்ளனர் இந்த ஐவரும்.

அங்கிருந்து கிளம்பிப் போகும்போது அப்பெண்ணுடன் வந்திருந்த சக ஆண் பத்திரிக்கையாளரின் கைகளைக் கட்டியிருந்த கட்டையும் அவிழ்த்து விட்டுப் போயுள்ளனர்.

மும்பை போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளனர். பலாத்கார சம்பவத்திற்குப் பின்னர் ஐந்து குற்றவாளிகளும் போன பின்னர் அந்தப் பெண் துரிதமாக செயல்பட்டு தனது ஆண் சக பத்திரிக்கையாளருடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

இதன் மூலம் பல முக்கிய ஆதாரங்கள் வீணாகி விடாமல் அவர் காத்துள்ளார். இதை டாக்டர்களும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளும் அனைவரும் கைது:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து குற்றவாளிகளும் சிக்கி விட்டனர். முதலில் மூன்று பேரைக் கைது செய்த போலீஸார் தற்போது கடைசி 2 பேரையும் பிடித்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே சந்த் ஷேக், சீரஜ் ரஹ்மான், விஜய் ஜாதவ் ஆகியோர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிரு்தனர். இதில் ஐந்தாவது நபரான சலீம் அன்சாரி என்பவன் டெல்லியில் வைத்துப் பிடிபட்டுள்ளான். அவனை மும்பைக்குக் கொண்டு வந்துள்ளனர் போலீஸார்.

இவன்தான் அந்த 22 வயது பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று மற்ற நான்கு குற்றவாளிகளையும் தூண்டி விட்டவன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று காலை மும்பை புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நான்காவது குற்றவாளியான காசிம் பங்காலி என்பவனை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். குற்றச் செயல் நடந்த சக்தி மில்ஸ் அருகிலேயே இவன் பதுங்கியிருந்துள்ளான். இவன்தான் அந்தப் பெண்ணை மிகவும் மோசமாக பலாத்காரம் செய்தவன். 20 வயதாகும் இவன் அப்பெண்ணை 2 முறை பலாத்காரம் செய்துள்ளான்.

இதற்கிடையே, முற்றிலும் பெண் மருத்துவர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கண்காணித்து வருகிறது. அப்பெண் மிகுந்த தைரியத்துடனும், திடமான மன நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டாலும் உடல் நிலை குணமானவுடன் மீண்டும் பணிக்குத் திரும்ப காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.










Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com