கத்தி வெட்டுக்கு இலக்காகிய தந்தை, மகள்: மகள் பரிதாபப் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கத்தி வெட்டுக்கு இலக்காகிய தந்தை, மகள்: மகள் பரிதாபப் பலி!

கத்தி வெட்டுக்கு இலக்காகிய தந்தை, மகள்: மகள் பரிதாபப் பலி!

Written By NIsha on Friday, August 23, 2013 | 9:56 AM

கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் ஈரியவெட்டிய, களனி பகுதியில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கத்திவெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (22) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கத்திவெட்டுக் காயங்களுக்கு உள்ளான தந்தை மற்றும் மகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மகள் உயிரிழந்துள்ளார். 48 வயதுடைய குமுதினி கல்பந்தி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த தந்தை ராகம வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்கென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்து விசாரணை நடாத்தி வருவதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com