கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி: விஜய்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி: விஜய்!

கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டிய மாண்புமிகு முதல்வருக்கு நன்றி: விஜய்!

Written By NIsha on Sunday, August 18, 2013 | 11:14 PM

தலைவா படம் குறித்து மீடியாக்களில் வந்த கட்டுக் கதைகளுக்கு பதிலடி தரும் விதமாக தலைவா படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வருக்கு நன்றி என்று நடிகர் விஜய் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகியுள்ள அந்த அறிக்கை:-

“தலைவா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம்தேதி வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல்கள் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை.

கடந்த பத்து தினமாக, நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, தலைவா திரைப்படம் சுமுகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பல வேலைகளுக்கு நடுவிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு பொறுமை காத்த ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தலைவா படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை!

“என்னது…தலைவா ரிலீஸ் ஆகுதா…” இதுதான் இப்போது பொதுமக்களில் பலர் கேட்கும் கேள்வி.

பல குளறுபடிகளுக்குப் பிறகு தலைவா படம் 20ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக பத்திரிகை விளம்பரங்களை மட்டுமே பார்த்து தெரிந்த கொள்ள வேண்டிய நிலையில்தான் பலர் இருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்றைய தேதியில் படம் வெளியாகப் போகிறது என்று எந்தவிதமான முறையான அறிவிப்பும் வரவில்லை. அதிலும் கூட, படத்திற்கான ரிசர்வேஷன் எப்போது ஆரம்பிக்கப் போகிறது என்பதும் குழப்பமாகவே உள்ளது. விளம்பரங்களில் இன்று முதல் ரிசர்வேஷன் என்று உள்ளது. ஆனால், பத்திரிகை செய்திகளில் நேற்று முதலே ரிசர்வேஷன் ஆரம்பமாகிவிட்டது என்று செய்தி வெளியாகி உள்ளது.

திரையரங்கு வட்டாரங்களில் நாம் விசாரித்த வரையில் , வழக்கமான பரபரப்போ , ஆர்பாட்டமோ இந்த படத்திற்கு தற்போது இல்லை என்றே தெரிகிறது. ‘தலைவா’ படத்தின் தாமதமான வெளியீடு நடிகர் விஜய்யின் எதிர்கால திரையுலக வாழ்க்கைக்கு மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை!?

தலைவா ரிலீஸ்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com