கூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்க இயற்க்கை தீர்வுகள்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்க இயற்க்கை தீர்வுகள்!

கூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்க இயற்க்கை தீர்வுகள்!

Written By NIsha on Saturday, August 3, 2013 | 8:36 AM

தற்போது அனைவரும் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால் அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கடைகளில் விற்கப்படும் பலவிதமான கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி, இன்னும் அந்த பிரச்சனையை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

சிலருக்கு அந்த கெமிக்கல் பொருட்கள் தற்காலிகமாக கூந்தல் உதிர்தலை தடுக்கலாம். ஆனால் ஒருநாள் அதனை பயன்படுத்த தவறிவிட்டால், கூந்தல் கொத்துகொத்தாக கையில் வரும். எனவே எப்போதும் இயற்கை பொருட்களைக் கொண்டு தீர்வு காண்பதே சிறந்தது. அந்த வகையில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் வெந்தயம். இந்த வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு சமையல் பொருள். அந்த பொருளைக் கொண்டு கூந்தலை பராமரித்தால், கூந்தல் உதிர்தல் மட்டுமின்றி, பொடுகுத் தொல்லை, பொலிவிழந்த மற்றும் மென்மையிழந்த கூந்தல் என பல பிரச்சனைகளை போக்கலாம்.

அதற்கு வெந்தயத்தை பல பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இப்போது அந்த வெந்தயத்தை எந்த பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டால், கூந்தலுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஊற வைத்த வெந்தயம்:
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலை அலசிவிட்டு, ஈரமான கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசினால், பல கூந்தல் பிரச்சனைகளைப் போக்கலாம்.

வெந்தய தண்ணீர்:
கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, 10 நிமிடம் ஊற வைத்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வலிமையோடு வளரும்.

தேங்காய் எண்ணெய்:
வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முறை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெந்தயக் கீரை மற்றும் தயிர்:
வெந்தயக் கீரையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அதனை எடுத்து, தயிர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, தலைக்கு தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஒருவேளை வெந்தயக் கீரை இல்லாவிட்டால், வெந்தயத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு:
பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியான ஸ்கால்ப் இருந்தால், அதனைப் போக்குவதற்கு வெந்தயப் பொடியில், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, கூந்தலுக்கு தடவ வேண்டும்.

வெந்தயம் மற்றும் பால்:
மற்றொரு ஹேர் மாஸ்க் என்றால், வெந்தயப் பொடியில் பால் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பிற்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

நெல்லிக்காய் பொடி:
நெல்லிக்காய் பொடியில் வெந்தயப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து, கூந்தலை அலசி, பின் ஈரமான கூந்தலில் அந்த கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com