ஆடம்பர மோகம், மகளை வைத்து விபச்சாரம்: சொகுசு பங்களா முற்றுகை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஆடம்பர மோகம், மகளை வைத்து விபச்சாரம்: சொகுசு பங்களா முற்றுகை!

ஆடம்பர மோகம், மகளை வைத்து விபச்சாரம்: சொகுசு பங்களா முற்றுகை!

Written By NIsha on Saturday, August 24, 2013 | 11:36 PM

கோவையை அடுத்துள்ள கோவில்பாளையம் விநாயகபுரத்தில் உள்ள ஒரு பங்களா வீட்டில் கீதா என்ற பெண்னும், ஆட்டோ டிரைவர் ராஜா என்பவரும் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக கோவில் பாளையம் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கோவில் பாளையம் இன்ஸ்பெக்டர் நேரு தலைமையிலான பொலிசார் நேற்று மாலை பங்களா வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். 5 படுக்கை அறை கொண்ட அந்த வீட்டிற்குள் ஒரு அறையில் 3 பெண்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மற்றொரு அறையில் இருந்த புரோக்கர் கீதாவையும், ராஜாவையும் பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி, லதா, சுவேதா ஆகிய 3 பெண்களையும் பொலிசார் மீட்டனர். இதில் ஒரு பெண் புரோக்கர் கீதாவின் மகள் ஆவார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் கீதாவிடம் விசாரணை நடத்தினர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும், தனது மாற்றுத்திறனாளி பெண்ணின் மருத்துவ செலவுக்காக இந்த தொழிலில் ஈடுபட்டதாகவும் பெற்ற மகள் என்றும் பாராமல் பணத்திற்கு ஆசைப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கீதா கூறினார்.

மேலும் ஆட்டோ டிரைவர் ராஜா வாடிக்கையாளர்களிடம் நைசாக பேசி பங்களா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 1 மணி நேரத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். பங்களா வீட்டிற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மீட்கப்பட்ட 3 பெண்களையும் பொலிசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். புரோக்கர்கள் கீதா, ராஜாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com