கூகுளின் அதிநவீன கண்டுபிடிப்பு: தானியங்கி அதிவேக ரோபோ கார்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கூகுளின் அதிநவீன கண்டுபிடிப்பு: தானியங்கி அதிவேக ரோபோ கார்!

கூகுளின் அதிநவீன கண்டுபிடிப்பு: தானியங்கி அதிவேக ரோபோ கார்!

Written By NIsha on Monday, August 26, 2013 | 11:58 PM

சாரதி இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ காரை கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது.

தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக கூகுள் நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது. இது போக்குவரத்துத்து துறையை புரட்டிப்போடும் ஒரு தொழில்நுட்ப்பமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதை பொடோட்டா பிரையஸ் மற்றும் எலக்சல் ஆர்எக்ஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இருந்தாலும் கார் உற்பத்தி தொழில் நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது. அதன் படி சாரதியே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. கூகுளின் தொழில்நுட்ப்ப சாதனைகளில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.

இவை சாரதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் வழங்குகிறது.

இக்கார்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஒட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்களால் வீதி விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com