குடும்ப பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பொலிஸ்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » குடும்ப பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பொலிஸ்!

குடும்ப பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பொலிஸ்!

Written By NIsha on Friday, August 30, 2013 | 12:02 PM

சேலத்தில் இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகில் உள்ள சமுத்திரம் தொப்பவளவு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி (27) எம்.காம். படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்பு அப்பெண் மேட்டூருக்கு பேருந்தில் சென்று எம்.காம் படித்து வந்தார். அப்போது அவருக்கும் ஜலகண்டாபுரம் மலையம்பாளையம் காட்டு வளவை சேர்ந்த சதீஸ் குமாருக்கும் (வயது 25) பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசி பழகி வந்தனர்.

இருவரும் நெருங்கி இருந்தபோது சதீஸ்குமார், அப்பெண்ணை தொலைபேசியில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து கொண்டார்.

இந்த நிலையில் பெண்ணிற்கு திருமணம் ஆகி விட்டது. பின்னர் சதீஸ்குமார் பொலிஸ் வேலைக்கு சேர்ந்து விட்டார். தற்போது அவர் கோவையில் உள்ள 4 வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களாக மணிகண்டன் மனைவிக்கு செல்போனில் பேசி மிரட்டி வந்தார். தான் சொல்லும்படி நடக்க வேண்டும். தனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் தொலைபேசியில் உள்ள ஆபாச படங்களை கணவர் மற்றும் உறவினர்களின் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து விடுவேன் என மிரட்டி வந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இதுபற்றி அவரது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் இடைப்பாடி பொலிசில் நேற்று புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சக்கரபாணி பொலிஸ்காரர் சதீஸ்குமாரை கைது செய்ய சேலம் மாவட்ட பொலிஸ் சூப்பிரெண்டு சக்திவேலிடம் அனுமதி பெற்றார். பின்னர் அவர் கோவை சென்று சதீஸ் குமாரிடம் விசாரித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com