வரதட்சணை கேட்டு மார்பு, வயிறு பகுதியில் சிகரெட்டால் சூடு: மனைவி முறைப்பாடு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வரதட்சணை கேட்டு மார்பு, வயிறு பகுதியில் சிகரெட்டால் சூடு: மனைவி முறைப்பாடு!

வரதட்சணை கேட்டு மார்பு, வயிறு பகுதியில் சிகரெட்டால் சூடு: மனைவி முறைப்பாடு!

Written By NIsha on Friday, August 16, 2013 | 10:32 PM

வேலூர் அருகே மனைவியின் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்குவதற்காக சொந்த மகனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாக கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

வேலூர் சார்பனாமேட்டை சேர்ந்தவர் நஸ்ரின் இவருக்கும் சத்துவாச்சாரியை சேர்ந்த மசூதுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது நஸ்ரினுக்கு அவரது பெற்றோர் 30 பவுன் வரதட்சணை கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மசூது மனைவி நஸ்ரினிடம் உனது தாய் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி வா என்று கூறி சித்ரவதை செய்தாராம். மேலும் அவரது குழந்தையின் மார்பு, வயிறு பகுதியில் சிகரெட்டால் சூடு போட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்ரின் வேலூர் பொலிஸ் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இன்று புகார் செய்தார். இதில் நடவடிக்கை எடுக்க சூப்பிரண்டு விஜயகுமார் வேலூர் அனைத்து மகளிர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையில் மகனுக்கு தந்தை சூடுபோட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com