கடாபியின் பாலியல் அடிமைகளாக பள்ளிச் சிறுமிகள்: திடுக்கிடும் தகவல்கள் வெளியானது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கடாபியின் பாலியல் அடிமைகளாக பள்ளிச் சிறுமிகள்: திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!

கடாபியின் பாலியல் அடிமைகளாக பள்ளிச் சிறுமிகள்: திடுக்கிடும் தகவல்கள் வெளியானது!

Written By NIsha on Monday, August 26, 2013 | 8:40 AM

பள்ளி சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கடாபி, செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்திலேயே கடாபி சிறுமிகளை கொடுமைப்படுத்தியது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தனது கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது பாடிகார்டுகளுக்கு கடாபி உத்தரவிடுவாராம். பின்னர் அந்த சிறுமிகளை ரகசிய அறையில் அடைத்து வைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்துவாராம். இப்படி கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமி தான் சொரயா, இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவர் சீரழிந்துள்ளார்.

தான் கொடூரமாக கற்பழிக்கப்பட்டதாகவும், அடித்துத் துன்புறுத்தப் பட்டதாகவும் சொரயா கூறியுள்ளார். தன்னை தினசரி கடாபி பலாத்காரம் செய்ததாகவும், அவர் மட்டுமல்லாமல் அவரது பாடிகார்டுகளும் தன்னை சீரழித்ததாகவும் கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு சிறுமிகளும் தங்களது சோகத்தை விவரித்துள்ளனர்.

அத்துடன் தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக என்று கூறி தான் வைத்திருந்த பெண் பாடிகார்டுகளை செக்ஸ் அடிமை போலவே நடத்தி வந்தாராம்.

தற்போது இந்த புத்தகம் 1 லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com