துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில்!

துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில்!

Written By NIsha on Thursday, August 22, 2013 | 11:19 PM

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து எனக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா பொலிஸாரும் இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com