டிசிடி அடங்கிய பால்மாக்களை விற்பனையிலிருந்து விலக்குமாறு அவசரப் பணிப்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » டிசிடி அடங்கிய பால்மாக்களை விற்பனையிலிருந்து விலக்குமாறு அவசரப் பணிப்பு!

டிசிடி அடங்கிய பால்மாக்களை விற்பனையிலிருந்து விலக்குமாறு அவசரப் பணிப்பு!

Written By NIsha on Wednesday, August 7, 2013 | 8:19 PM

பால்மா சம்பந்தமான அனைத்து வர்த்தக விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மறு அறிவித்தல் வரை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று 7ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

பால் மா தொடர்பாக தற்போது எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைத்து பால் மா வகைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை: பால் மா தொடர்பில் எழுந்துள்ள நிலமையைக் கருத்திற்கொண்டு நேற்று உணவு ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

இதற்கிணங்க டிசிடி இரசாயனம் உள்ளடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மாவின் மாதிரி நேற்று முதல் கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி நிறுவனத்தினால் டிசிடி இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பால் மா வகைகளை விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மெலிபன் நிறுவனம், பொன்டேரா நிறுவனம், ஜீ.எம்.மொகமட் அலி நிறுவனம் ஆகியவற்றுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால் டிசிடி உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால் மா, மெலிபன் முழு ஆடைப் பால்மா, டயமண்ட் முழு ஆடைப் பால்மா ஆகியவற்றை உடனடியாக வர்த்தக நிலையங்களிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மறு அறிவித்தல் வரை அனைத்துப் பால்மா விளம்பரங்களையும் வெளியிடுவதை தற்காலிகமாகக் இடைநிறுத்துமாறு அக்குழு நிறுவனங்களின் பிரதானிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

விளம்பரங்களுக்கும் தடை.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால் மா வகைகள் தொடர்பிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு உடனடித் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தற்காலிகத் தடையை விதித்துள்ளார்.

நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் பால் மா வகையில் இரசாயன பதார்த்தம் கலந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மால் மா வகைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மறு அறிவித்தல் வரை அனைத்து பால் மா விளம்பரங்களையும் வெளியிடுவதை இடைநிறுத்துமாறு ஊடக நிறுவன பிரதானிகளிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com