காப்பகத்திலிருந்து துறைமுகம் சென்று, துறைமுகத்திலிருந்து வீடு சென்ற சிறுமி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » காப்பகத்திலிருந்து துறைமுகம் சென்று, துறைமுகத்திலிருந்து வீடு சென்ற சிறுமி!

காப்பகத்திலிருந்து துறைமுகம் சென்று, துறைமுகத்திலிருந்து வீடு சென்ற சிறுமி!

Written By NIsha on Monday, August 12, 2013 | 5:22 AM

சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்து கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்க்கச் சென்று காணாமற் போனதாக கூறப்பட்ட சிறுமி காப்பகத்திற்கு திரும்பாது தனது வீட்டை தேடிச் சென்றுள்ளார்.

கொழும்பு 10 சிறிதம்ம மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் துறைமுகத்தை பார்க்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் சிறுமி காணாமற்போயுள்ளதாக சிறுவர் இல்லத்தால் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் சிறுமி தெஹிவளையிலுள்ள தனது வீட்டை தேடிச் சென்றுள்ளார்.

எனினும் சிறுமியின் உறவினர்கள் அவரை மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com