
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா - பாக். அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்தன.
இந்த சூழ்நிலையில் இதுபோன்ற கோர சம்பவம் எல்லையில் நடந்துள்ளது.
இது தொடர்பாக இராணுவ வட்டாரங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய நிலைகள் பகுதியில் இந்திய ஜவான்கள் வழக்கமான ரோந்துப் பணியினை மேற்கொண்டிருந்தனர். அப்போது தான் பாக். இராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பயங்கரவாதிகளும் துணை போயிருக் கலாம் என தெரிகிறது. பலியான 5 வீரர்களும், பீகார் மாநிலத்தின் 21-வது ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்திய எல்லையில் பாக்.ராணுவத்தினர் அத்துமீறி புகுந்து, இந்திய வீரர்களின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !